1. ஆண்டவரே கடைசியில் எதுவரைக்கும் என்னை மறந்திருப் பீர்? எதுவரைக்கும் உமது முகத்தை என்னிடத்தில் நின்று திருப்பிக் கொள்வீர் (சங். 32:1)?
2. எதுவரைக்கும் நான் என் னிருதயத்தில் சஞ்சல சிந்தனை வைத்து நாளளவும் என் ஆத்துமத்தில் துக்கித்திருப்பேன்?
3. எதுவரைக்கும் என் சத்துரு என்பேரில் தன்னை உயர்த்துவான்.
4. என் தேவனாகிய ஆண்டவரே (என்னை) நோக்கி என் மன்றாட் டைக் கேட்டருளும். மரண அந்தகா ரத்தில் நான் தூங்காதபடிக்கு என் கண்களுக்கு பிரகாசத்தைக் தந்தருளும்.
5. (அப்படியானால்) அவனை செயங்கொண்டேன் என்று என் பகையாளி சொல்லி, நான் தள்ளாடி போனால் என்னைத் துன்பப் படுத்துகிறவர்களனைவரும் மகத் துவங் கொண்டாடுவார்கள்.
6. நானோ உமது கிருபையின் பேரில் நம்பிக்கை வைத்திருக் கிறேன்; உமது இரட்சிப்பின்பேரில் என் இருதயங் களிகூரும்; எனக்கு நன்மைகளைப் பொழிந்த ஆண்டவர்
பேரில் கீர்த்தனம் பண்ணுவேன்; மகா மகத்துவம் பொருந்திய ஆண்ட வர் நாமத்தைக் குறித்துச் சங்கீதம் பாடுவேன்.